சேலம் கொத்திகுட்டை ஏரியில் மூழ்கி மூவர் பலி: முதல்வர் நிவாரணம் அறிவிப்பு | Chief Minister announced relief as three people drowned while going to wash clothes in Salem’s Kothikuttai lake

1329516.jpg
Spread the love

சென்னை: சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே கொத்திகுட்டை ஏரியில் துணிதுவைக்கச் சென்றபோது மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை; சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், வீரக்கல் கிராமம், கொத்திக்குட்டை ஏரியில் கடந்த அக்., 20 ஆம் தேதி நண்பகல் 12.00 மணியளவில் வீரக்கல் கிராமம், வீரக்கல் புது காலனியைச் சேர்ந்த சிவலிங்கம் என்பவரின் மகள் சிவநந்தினி (வயது 20), மகன் சிவகிரி (வயது 10) மற்றும் முனுசாமி என்பவரின் மகள் திவ்யதர்ஷினி (வயது 14) ஆகிய மூவரும் துணிதுவைக்கச் சென்றபோது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *