ஜாதி மறுப்பு திருமணம்; மார்க்.கம்யூனிஸ்டு அலுவலகம் சூறை

Cpm
Spread the love

திருநெல்வேலியில் ஜாதி மறுப்பு திருமணம்செய்து வைத்ததால் மார்க்ஸ்சிஸ்டு கம்யூனிஸ் கட்சி அலுவலம் நொறுக்கி சூறையாடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பல்வேறு கட்சியினர் கண்டனம்தெரிவித்து உள்ளனர். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யவேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.

K Balakrishnan
இந்தநிலையில் இந்த தாக்குதல் தொடர்பாக மார்க்ஸ்சிஸ்டு கம்யூனிஸ் கட்சியின் மாநில செயலாளார் பாலகிருஷ்ணன்வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காதல் திருமணம்

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை, நம்பிக்கை நகரைச் சேர்ந்த மதன் குமார் என்பவரும், பாளையங்கோட்டை பெருமாள்புரத்தைச் சேர்ந்த உதய தாட்சாயினி என்பவரும் கடந்த 6 வருடமாக காதலித்து வந்தனர்.
இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இருவரும் நேற்றைய தினம் (ஜூன் 13தேதி) திருமணம் செய்து கொண்டனர். இன்று (ஜூன் 14ந்தேதி) மேலப்பாளையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்ய முன்பதிவு செய்திருந்தனர்.

lovers

மார்க்ஸ்சிஸ்டு கம்யூனிஸ் கட்சி அலுவலகம் சூறை

இதனை பெண் வீட்டார் தரப்பில் தடுத்த நிலையில் பாதுகாப்பு கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை அணுகினர். காவல்துறை அனுமதியோடு திருமணத்தை பதிவு செய்ய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முயற்சி மேற்கொண்ட நிலையில் பந்தல் ராஜா மற்றும் ஜெயக்குமார் உள்ளிட்ட 25 பேர் கொண்ட கும்பல் திருநெல்வேலி, வினோபா நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்திற்குள் நுழைந்து காவல்துறையினர் முன்பாகவே மேஜை, நாற்காலி, கண்ணாடி, கதவு, பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கியுள்ளனர்.

இதனை தடுக்கச் சென்ற அருள்ராஜ் மற்றும் முருகன் இருவரையும் தாக்கியுள்ளனர். காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கும்பலில் சிலரை பிடித்துள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தை தாக்கிய கும்பலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு வன்மையாக கண்டிக்கிறது. சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல் மீது வழக்கு பதிவு செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

fight

உரிய நடவடிக்கை

திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர்ந்து சாதி ஆணவப்படுகொலை நடந்து வருவது மிகவும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. இதன் தொடர்ச்சியாகவே காதல் தம்பதிகளுக்கு பாதுகாப்பு அளித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை தாக்கி ஊழியர்களை காயப்படுத்தியுள்ளார்கள். இச்சம்பவத்தை தமிழக காவல்துறை அலட்சியப்படுத்தாமல் உரிய நடவடிக்கை எடுப்பதுடன் – சம்பந்தப்பட்ட காதல் தம்பதிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அழுத்தமாக வற்புறுத்துகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்:

உக்ரைன் அமைதி தீர்வுக்கு இந்தியா உதவும்-பிரதமர் மோடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *