தகுதி அடிப்படையில் ரேஷன் கடை ஊழியர் நியமனம்: அமைச்சர் | Appointment of ration shop employees based on merit Minister

1342300.jpg
Spread the love

சிவகங்கை: நேர்காணல் முடிந்தவுடன், தகுதி அடிப்படையில் ரேஷன் கடை ஊழியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் கூறினார்.

சிவகங்கை இந்திரா நகரில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.37 லட்சத்தில் அமைக்கப்பட்ட பூங்கா திறப்பு விழா நேற்று நடைபெற்றது. ஆட்சியர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறும்போது “ரேஷன் கடை விற்பனையாளர். கட்டுநர் பணியிடங்களுக்கு நேர்காணல் நடைபெற்று வருகிறது. நேர்காணல் முடிந்தவுடன். தகுதி அடிப்படையில் பணியாளர்கள் நியமிக்கப்படுவர். மொத்தம் 3,440 பணியிடங்களுக்கு 96,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளன” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *