தமிழ்நாடு பட்ஜெட் இலச்சினையில் ‘ரூ’ குறியீடு!

Dinamani2f2025 03 132fwc7njkuo2fgl59e7vwwaalcvo.jpg
Spread the love

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை இலச்சினையை ரூபாய் குறியீட்டிற்குப் பதிலாக ‘ரூ’ எனப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நாளை(மார்ச் 14) காலை 9.30 மணிக்கு தாக்கல் செய்யவுள்ளார்.

இந்நிலையில் தமிழ்நாடு அரசின் மாநில திட்டக்குழு சார்பில் தயாரிக்கப்பட்ட 2024-25 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கையை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசு, பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிடுவது இதுவே முதல்முறையாகும்.

இந்நிலையில் தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை இலச்சினையில் கடந்த ஆண்டுகளில் ரூபாய் குறியீடு இடம்பெற்றிருந்தது.

இந்த ஆண்டு ரூபாய் குறியீட்டிற்குப் பதிலாக ‘ரூ’ என்ற எழுத்து இடம் பெற்றுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *