தமிழ்ப் பல்கலை.​யில் 40 பேரை பணி நியமனம் செய்தது தொடர்பாக விசா​ரணை குழு: ஆளுநர் ஆர்.என்​.ரவி உத்தரவு | inquiry committee regarding the appointment of 40 people in Tamil University

1340586.jpg
Spread the love

தஞ்சாவூர்: தமிழ்ப் பல்கலைக்​கழகத்தில் 40 பேர் பணி நியமனம் தொடர்பாக ஓய்வு​பெற்ற நீதிபதி தலைமை​யில் விசா​ரணைக் குழு அமைத்து ஆளுநர் ஆர்.என்​.ரவி உத்தர​விட்​டுள்​ளார்.

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்​தின் 13-வது துணைவேந்​தராக வி.திரு​வள்​ளுவன் 2021-ம் ஆண்டு டிச.11-ம் தேதி பொறுப்​பேற்​றார். இவரது பணிக்​காலம் டிச. 12-ம் தேதி​யுடன் நிறைவடைய உள்ள நிலை​யில், தமிழக ஆளுநரால் நேற்று முன்​தினம் பணியிடை நீக்கம் செய்​யப்​பட்​டார். 2017-2018-ம் ஆண்டில் பல்கலைக்​கழகத்​தில் துணைவேந்​தராக பாஸ்​கரன் இருந்த​போது, பேராசிரியர், உதவிப் பேராசி​ரியர்கள் 40 பேர் பணி நியமனம் செய்​யப்​பட்​டனர்.

இவர்களை தகுதி​காண் பருவம் நிறைவு பெற்​ற​தாகக் கூறி, பணி நிரந்​தரம் செய்​தது தொடர்பாக பல்கலை. துணைவேந்தர் திருவள்​ளு வனிடம் விளக்கம் கேட்​கப்​பட்​டது. ஆனால், துணைவேந்தர் வழங்கிய விளக்​கத்​தில் திருப்தி இல்லை எனவும், இது தொடர்பான வழக்கு நீதி​மன்​றத்​தில் நிலுவை​யில் உள்ள​போது, முறை​கேடாக பணியில் சேர்ந்​தவர்​களுக்கு ஆதரவாக இருந்​த​தாக​வும் கூறி துணைவேந்தர் பணியிடை நீக்கம் செய்​யப்​பட்​டுள்​ளார் என்று ஆளுநர் ஆர்.என்​.ரவி பிறப்​பித்த உத்தர​வில் கூறப்​பட்​டுள்​ளது.

மேலும், இதுகுறித்து விசாரணை நடத்த, சென்னை உயர் நீதி​மன்​றத்​தின் ஓய்வு​பெற்ற நீதிபதி எம்.ஜெயச்​சந்​திரன் தலைமை​யில் விசா​ரணைக் குழு அமைக்​கப்​பட்​டுள்ளது எனவும் அந்த உத்தர​வில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. மாணவர்கள் ஆர்ப்பாட்டம்: இதற்​கிடையே, துணைவேந்​தரின் பணியிடை நீக்​கத்​தைக்கண்டித்து தமிழ்ப் பல்​கலைக்கழக ​மாணவர்​கள் நேற்று ​மாலை பல்​கலைக்​கழகம் ​முன்பு ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்​டனர்​.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *