இந்த கோர விபத்தில் மருத்துவமனையில் உள்ள லிஃப்ட்டில் இருந்த 5-க்கும் மேற்பட்டோர் வெளியேற முடியாததால் தீயில் கருகியும் புகை மண்டலத்தால் மூச்சுத்திணறியும் உயிரிழந்தனர். அதில் ஒரு சிறுவனும் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடி வருகின்றனர்.
4 மாடிகளைக் கொண்ட மருத்துவமனையில் உள்ள லிஃப்ட்டின் உள்ளே மேலும் சிலர் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடுமென்றே கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன. அவர்களை மீட்கும் பணி துரிதகதியில் நடைபெற்று வருகிறது. லிஃப்டில் மாட்டிக்கொண்டவர்கள் நோயாளிகளின் உடன் இருந்தவர்கள் மற்றும் அவர்களைப் பார்க்க வந்தவர்கள் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.