ஸ்வதந்திர சேனானி ரயில் மற்றும் புவனேசுவரம் ராஜ்தானி விரைவு ரயில்கள் தாமதமானதால் அதில் செல்வதற்காக காத்திருந்த பயணிகளும் நடைமேடை 12, 13, 14-இல் திரண்டனா். இதனால் நடைமேடை 14 மற்றும் நடைமேடை 16-க்கு அருகில் உள்ள நகரும் படிக்கட்டுகளுக்கு அருகில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இதனிடையே, 1,500 பேருக்கான முன்பதிவு செய்யாத பொது பயணச் சீட்டுகள் விற்கப்பட்டதால் கூட்டம் கட்டுக்கடங்காமல் போனதாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நெரிசலில் சிக்கி பலர் காயமடைந்த நிலையில், போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர ரயில்வே நிர்வாகம் முயற்சித்தது.
ஆனால், விபத்தில் காயமடைந்த 3 குழந்தைகள் உள்பட 15 பேர் உயிரிழந்ததாக முதல்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பலர் லோக்நாயக் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.