தென்கிழக்கு ஆசிய நாடுகளை இணைக்கும் பாலம் ராமாயணம்: சிங்கப்பூர் கலை இயக்குநர் நெகிழ்ச்சி | சிங்கா 60 | Ramayana is a bridge connecting Southeast Asian countries

1372189
Spread the love

சென்னை: “தென்​கிழக்கு ஆசிய நாடு​களை இணைக்​கும் பால​மாக ராமாயணம் திகழ்​கிறது” என்று ‘சிங்கா 60’ கலைத் திரு​விழா நிகழ்ச்​சி​யில் சிங்​கப்​பூர் கலை இயக்​குநர் அரவிந்த் குமார​சாமி நெகிழ்ச்​சி​யுடன் குறிப்​பிட்​டார்.

சிங்​கப்​பூரின் 60-வது தேசிய தின கொண்​டாட்​டத்தை முன்​னிட்டு ‘இந்து தமிழ் திசை’, ‘தி இந்​து’ மற்​றும் ‘தி இந்து பிசினஸ் லைன்’ இணைந்து சென்​னை​யில் ‘சிங்கா 60’ என்ற 10 நாள் கலைத் திரு​விழாவை ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் கோலாகல​மாக நடத்தி வரு​கின்​றன. ​விழா​வின் 6-ம் நாளான நேற்று அடை​யாறு பத்​ம​நாபா நகரில் உள்ள ஃபோரம் ஆர்ட் கேலரி​யில்‘ஆசிய கலாச்​சா​ரங்​களில் ராமாயணம்’ என்ற தலைப்​பில் சிறப்பு கலை சொற்​பொழிவு நிகழ்ச்சி நடந்​தது.

இதில் சிங்​கப்​பூரைச் சேர்ந்த அப்​சரா நடனப் பள்ளி கலை இயக்​குந​ரான இசை, நடனக் கலைஞர் அரவிந்த் குமார​சாமி உரை​யாற்​றி​னார். அப்​போது அவர் பேசி​ய​தாவது: ராமாயணம் ஒரு அழியா காவி​யம். அது தர்​மம், விசு​வாசம், தியாகம், நேர்மை ஆகிய பண்​பு​களை வலி​யுறுத்​துகிறது. தீமையை நன்மை வெற்றி கொள்​ளும், நேர்மை வெல்​லும், அர்ப்​பணிப்பு போன்​றவை அதன் முக்​கிய கருப்​பொருள்​கள் ஆகும். உலகில் மலைகள் இருக்​கும் வரை, ஆறுகள் ஓடும் வரை ராமாயணம் மக்​களிடையே மீண்​டும் மீண்​டும் சொல்​லப்​பட்​டுக்கொண்டே இருக்​கும். ராமா யணத்தை எழுத்​து, நாடகம், நடனம், இசை, சிற்​பம் என பல்​வேறு வடிவங்​களில் காணலாம். உலகிலேயே அதிக முஸ்​லிம் மக்​கள்​தொகை கொண்ட நாடு இந்​தோ​னேசி​யா. அந்​நாட்டு மக்​கள் ராமாயணத்தை கொண்​டாடு​கிறார்​கள். அது​தான் ராமாயணத்​தின் ஆற்​றல்.

தென்​கிழக்கு ஆசிய நாடு​களான தாய்​லாந்​து, கம்​போடி​யா,லாவோஸ், இந்​தோ​னேசி​யா, மலேசியா உள்​ளிட்ட நாடு​களில் ராமாயணம் வெவ்​வேறு பெயர்​களில் வழங்​கப்​படு​கிறது. அந்​நாடு​களில் நடனம், பொம்​மலாட்​டம், கோயில் சிற்​பங்​கள், ஓவி​யங்​கள் போன்​றவற்​றில் ராமாயண காட்சி நிகழ்​வு​கள் இடம்​பெற்​றுள்​ளன. உதா​ரணத்​துக்​கு, இந்​தோ​னேசி​யா​வின் பிராந்​திய மொழி​யான ஜாவனிய மொழிப்​பாடல்​கள், பொம்​மலாட்​டம் உள்​ளிட்ட பாரம்​பரிய கலை வடிவங்​களில் ராமாயணத்தை பார்க்​கலாம். அதே​போல் கம்​போடியா நாட்​டின் பாரம்​பரிய நடனங்​களில் ராமாயணக் கதைகள் இடம்​பெற்​றுள்​ளன. அந்​நாட்​டில் உள்ள அங்​கோர்​வாட் கோயில் சிற்​பங்​களில் ராமாயண காட்​சிகள் தத்​ரூப​மாக வடிக்​கப்​பட்​டுள்​ளன. மேலும் அங்​குள்ள பாண்டே ப்ரீ கோயில், புரோம்​பானம் கோயில் சிற்​பங்​களி​லும் ராமாயண கதை காட்​சிகளைக் காணலாம். தாய்​லாந்து நாட்​டின் தேசிய புராண​மாக இருப்​பது ராமாயணம். அது ராமகியன் என்ற பெயரில் அங்கு அழைக்​கப்​படு​கிறது.

இந்​தியா மற்​றும் தென்​கிழக்கு ஆசிய நாடு​கள் இடையி​லான கூட்டு கலாச்​சார பரி​மாற்​றங்​களில் ராமாயணம் தொடர்​பான நடனங்​களுக்​கும் நாடகங்​களுக்​கும் முக்​கிய இடம் உண்​டு. ராமாயணம் என்​பது ஒரு கதை என்​ப​தைத் தாண்டி அது ஓர் உயிருள்ள பாரம்​பரி​யம் ஆகும். அது நமது கலாச்​சாரவேர்​களை​யும், மதிப்​பீடு​களை​யும் கொண்​டாடு​கிறது. நாடு​களைத் தாண்​டிய கலாச்​சார கதைகளின் ஆற்​றலுக்கு உதா​ரண​மாக திகழ்​கிறது. அது தென்​கிழக்கு ஆசிய நாடு​களை இணைக்​கும் பால​மாக விளங்​கு​கிறது.இவ்​வாறு அவர் பேசி​னார்.

அரவிந்த் குமார​சாமிக்கு ‘இந்து தமிழ் திசை’ இயக்​குநர் லட்​சுமி ஸ்ரீநாத் நினை​வுப் பரிசு வழங்​கி​னார். முன்​ன​தாக, ஃபோரம் ஆர்ட் கேலரி இயக்​குநர் ஷாலினி பிஸ்​வஜித் வரவேற்​றார். நிறை​வாக ‘இந்து தமிழ் திசை’ இயக்​குநர் அகிலா விஜய் ஐயங்​கார் நன்றி கூறி​னார். அவர் பேசும் போது, “சிங்கா 60 விழா​வில், ஓவியக்கண்​காட்​சி, கலை, கலாச்​சா​ரம், நாடகம், உணவு, குழு விவாதம் என பலதரப்​பட்ட நிகழ்​வு​கள் உள்​ளன. சிங்​கப்​பூர்​-இந்திய கலைஞர்​களின் படைப்​பு​கள் அடங்​கிய ஓவியக் கண்​காட்சி ஃபோரம் ஆர்ட் கேலரி​யில் ஆகஸ்ட் 30 வரை ஒரு மாதம் நடை​பெறுகிறது. சிங்கா60 நிகழ்ச்சி வாயி​லாக சிங்​கப்​பூரை சென்னை நகருக்கு கொண்​டு​வந்​துள்​ளோம். இந்​நிகழ்ச்​சியை சென்​னை​வாசிகள் மகிழ்ச்​சி​யுடன் கண்டு களிக்​கட்​டும்” என்​றார். இந்​நிகழ்ச்​சி​யில், சிங்​கப்​பூர் துணை தூதர் வைஷ்ணவி வாசுதேவன் ‘இந்து தமிழ் திசை’ இயக்​குநர் விஜயா அருண் மற்​றும் கல்​வி​யாளர்​கள், கலை ஆர்​வலர்​கள் கலந்​து​கொண்​டனர்.

‘சிங்கா 60’ நிகழ்ச்​சிக்​கான பங்​கு​தா​ரர்​களாக சிங்​கப்​பூர் தூதரகம், டிபிஎஸ் வங்​கி​யும் துணை பங்​கு​தா​ரர்​களாக டிவிஎஸ், லார்​சன் அண்ட் டூப்​ரோ, ஓலம் அக்​ரி, டிரான்​ஸ்​வோர்ல்​டு, நிப்​பான் பெயின்ட் அண்ட் எச்​ஒய்​சி, ராம்​ராஜ் காட்​டன், லலிதா ஜுவல்​லரி, ரெசிடென்சி டவர்​ஸ், ஃபோரம் ஆர்ட் கேலரி, மிஸ்​டர் ஓங், நாசி அண்ட் மீ,பம்​கின் டேல்​ஸ், மேவெண்​டோயர், சிங்​கப்​பூர் தமிழ் முரசு நாளிதழ் ஆகிய​வை​யும் உள்​ளன.

‘சிங்கா 60’ திரு​விழா​வின் 7-வதுநாளான இன்று பிற்​பகல் 3 மணிக்கு கிண்​டி​யில் உள்ள ஹோட்​டல் ஐடிசி கிராண்ட் சோழா​வில் ‘இண்​டியா கனெக்ட் சிங்​கப்​பூர் எடிஷன்’ என்ற தலைப்​பில்சிறப்பு விவாத நிகழ்ச்சி நடை​பெறு கிறது. இதில், இந்​தி​யா-சிங்​கப்​பூர் இடையி​லான ராஜ்ஜிய, பொருளா​தார, தொழில்​நுட்ப உறவு​கள் குறித்து விரி​வாக விவா​திக்​கப்​படு​கிறது. இந்​நிகழ்ச்​சி​யில், மத்​திய அரசின் தலைமை பொருளா​தார ஆலோ​சகர் அனந்த நாகேஸ்​வரன், மத்​திய அரசின் மின்​னணு மற்​றும் தகவல் தொழில்​நுட்​பத்​துறை செயலர் எஸ்​.கிருஷ்ணன், சிங்​கப்​பூர், பிரான்ஸ் நாடு​களுக்​கான முன்​னாள் இந்​திய தூதர் ஜாவத் அஷ்ரப் ஆசிய ஆராய்ச்​சிக் கழகத்​தைச் சேர்ந்த கிஷோர் மது​பானி உள்​ளிட்​டோர் பங்​கேற்​கின்​றனர். ஆகஸ்ட் 8-ம் தேதி (நாளை) காலை 11 மணிக்கு ஃபோரம் ஆர்ட் கேலரி​யில் சிங்​கப்​பூர் கலைஞர் குமாரி நாகப்​பன்​ பங்​கேற்​கும்​ கலை சொற்​பொழி​வு நிகழ்ச்​சிநடை​பெறுகிறது. ‘கலைப்​ படைப்​புகளின்​ உரு​வாக்​கம்​’ என்​ற தலைப்​பில்​ அவர்​ உரை​யாற்​றுகிறார்​.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *