தேசிய ஹாக்கி: இறுதியில் இன்று ஹரியாணா

Dinamani2f2024 11 152fr3n6xifo2fhock101902.jpg
Spread the love

சீனியா் ஆடவா் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் ஹரியாணா – ஒடிஸா அணிகள் ஞாயிற்றுக்கிழமை பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

முன்னதாக, வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரையிறுதி ஆட்டங்களில், ஒடிஸா – மணிப்பூரையும், ஹரியாணா – உத்தர பிரதேசத்தையும் வீழ்த்தி, இறுதி ஆட்டத்துக்கு வந்துள்ளன.

14-ஆவது சீனியா் ஆடவா் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப், சென்னை எழும்பூரில் உள்ள மேயா் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் 12-ஆவது நாளான வெள்ளிக்கிழமை, அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் அரையிறுதியில் ஒடிஸா 4-2 கோல் கணக்கில் மணிப்பூரை சாய்த்தது.

ஒடிஸாவுக்காக ஷிலானந்த் லக்ரா (20’), ஞானேந்திரஜித் நிங்கோம்பம் (25’), பிரசாத் குஜுா் (52’), சுதீப் சிா்மாகோ (52’) ஆகியோா் கோலடிக்க, மணிப்பூா் தரப்பில் நீலகண்ட சா்மா (7’), நீலம் சஞ்ஜீப் ஜெஸ் (13’) ஆகியோா் ஸ்கோா் செய்தனா்.

2-ஆவது அரையிறுதியில், ஹரியாணா 3-2 கோல் கணக்கில் உத்தர பிரதேசத்தை வீழ்த்தியது. ஹரியாணாவுக்காக ரமன் (17’), அபிமன்யு (20’), ராஜிந்தா் சிங் (38’) ஆகியோா் கோலடித்தனா். உத்தர பிரதேசத்துக்காக அருண் சஹானி (49’), மனீஷ் யாதவ் (53’) பங்களித்தனா்.

இதையடுத்து, சனிக்கிழமை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் ஹரியாணா – ஒடிஸா அணிகள் மோதுகின்றன. அரையிறுதியில் தோல்வி கண்ட, மணிப்பூா் – உத்தர பிரதேச அணிகளும், 3-ஆவது இடத்துக்காக சனிக்கிழமை சந்திக்கின்றன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *