இது இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை எனக் கூறப்படும் நிலையில், இதில் போர் நிறுத்தம் தொடர்பாக முடிவு எட்டப்படும் என்ற நம்ப்பிக்கை உள்ளதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. பாலஸ்தீன ஆதரவு பெற்ற ஹமாஸ் படையினரை காஸாவில் இருந்து முற்றிலுமாக அழிக்கும் நோக்கத்தில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதில், ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்த நிலையில், லட்சக்கணக்கான மக்கள் உடமைகளை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.
மனிதாபிமானமற்ற முறையில் முகாம்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் தற்போது வரை உலக நாடுகளிடையே 7 போரை நிறுத்தியுள்ளதாகக் கூறும் அதிபர் டிரம்ப், காஸா போர் நிறுத்தம் தொடர்பாகவும் பேச்சுவார்த்தைக்கு ஆர்வம் காட்டி வருகிறார்.