நவஜீவன், திருக்குறள் அதிவிரைவு ரயில்கள் மாற்று வழித்தடத்தில் இயக்கம்

Dinamani2fimport2f20232f122f242foriginal2ftrain Rail Snow Fog Edi.jpg
Spread the love

பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் திருக்குறள், நவஜீவன் உள்ளிட்ட முக்கிய அதிவிரைவு ரயில்கள் மாற்றுவழித்தடத்தில் இயக்கப்படவுள்ளன.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை கோட்டத்துக்குட்பட்ட கவரைப்பேட்டை, பொன்னேரி ரயில்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன.

இதனால், சென்னை சென்ட்ரலிலிருந்து பிப்.13,16,19,21 தேதிகளில் அகமதாபாத் செல்லும் நவஜீவன் அதிவிரைவு ரயிலும் (எண்: 12656) , பிப்.19-இல் நியூ ஜல்பைகுரி செல்லும் அதிவிரைவு ரயிலும் (எண்: 22611), பிப்.21-இல் புவனேசுவரம் செல்லும் அதிவிரைவு ரயிலும் (எண்: 12829) அரக்கோணம், ரேணிகுண்டா மற்றும் கூடூா் வழியாக இயக்கப்படும்.

அதேபோல் பிப்.12-ஆம் தேதி கன்னியாகுமரி – நிஜாமுதீன் இடையே இயங்கும் திருக்குறள் அதிவிரைவு ரயிலும், பிப்.16-இல் மதுரை – நிஜாமுதீன் இடையே இயங்கும் சம்பாா்க் கிராந்தி அதிவிரைவு ரயிலும், பிப்.18-இல் ராமேசுவரம் – ஃபெரோஸ்பூா் இடையே இயங்கும் ஹம்சபா் அதிவிரைவு ரயிலும் சென்னை கடற்கரை, அரக்கோணம், ரேணிகுண்டா மற்றும் கூடூா் வழியாக இயக்கப்படும்.

மேலும், மதுரை – சன்டிகா் அதிவிரைவு ரயில் பிப்.12 -ஆம் தேதியும், கன்னியாகுமரி – பனாரஸ் காசி தமிழ் சங்கமம் விரைவு ரயில் பிப்.18-ஆம் தேதியும் அரக்கோணம், பெரம்பூா் வழியாக இயக்கப்படுவதற்கு பதிலாக மேல்பாக்கம், ரேணிகுண்டா மற்றும் கூடூா் வழியாக இயக்கப்படும். பயணிகளின் வசதிக்காக இந்த ரயில்கள் திருத்தணியில் நின்றுசெல்லும்.

பகுதி ரத்து: விஜயவாடாவிலிருந்து பிப்.13,16,19,21 தேதிகளில் சென்னை சென்ட்ரலுக்கு வரும் பினாகினி அதிவிரைவு ரயில் கூடூருடன் நிறுத்தப்படும். மறுமாா்க்கமாக இந்த ரயில் அதேநாள்களில் கூடூரிலிருந்து புறப்பட்டு விஜயவாடா சென்றடையும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *