நாகை – இலங்கை கப்பல் சேவை ஐந்து நாட்களாக அதிகரிப்பு: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி | Nagai – Sri Lanka ferry service increased to five days

1334233.jpg
Spread the love

நாகை: நாகப்பட்டினம் – இலங்கை காங்கேசன் துறை இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து இனி வாரத்தில் 5 நாட்களுக்கு இயக்கப்படும் என கப்பல் போக்குவரத்து நிர்வாகம் அறிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 16 ம் தேதி நாகை – இலங்கை இடையே சிவகங்கை என்ற பயணிகள் கப்பல் சேவை தொடங்கியது. முதலில் தினந்தோறும் இரு மார்க்கத்திலும் இயக்கப்பட்ட நிலையில் பயணிகள் முன்பதிவு குறைவாக இருந்ததால் வாரத்தில் செவ்வாய், வியாழன், ஞாயிறு மூன்று நாட்களாக குறைக்கப்பட்டு இயக்கப்பட்டது. அதன் பின்னர் சனிக்கிழமை உட்பட்ட 4 நாட்களாக நீட்டிக்கப்பட்டது. இது பயணிகளிடையே நல்ல வரவேற்பை பெற்று முன்பதிவும் அதிகரித்துள்ளது.

அதைத்தொடர்ந்து இனி வாரத்தில் 5 நாட்கள் கப்பலை இயக்க கப்பல் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி பயணிகள் வசதிக்காக எதிர்வரும் 8ம் தேதி முதல் வெள்ளிக் கிழமைகளிலும் கப்பல் போக்குவரத்து சேவை இருக்கும் என ‘சிவகங்கை’ கப்பல் போக்குவரத்து நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *