எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக நாகை மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்திலிருந்து அக்.26 ஆம் தேதி காலை 8 மணி அளவில் அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்திலிருந்து சிலம்பு செல்வன் (38)
என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த குணா (40), செஞ்சி வேல் (45), வெங்கடேசன் (45), அலெக்ஸ் (28), சின்னப்பு (25), கார்த்தி (22), வளர் செல்வன் (40), ரகு (45), ரவி (50), மேகநாதன், புஷ்பவனத்தை சேர்ந்த மகேந்திரன், சாமுவேல் ஆகியோர் மீன்பிடிக்கச் சென்றனர்.
பருத்தித்துறை வடகிழக்கு கடல் பகுதியில் சனிக்கிழமை (அக். 26) நள்ளிரவு மீன் பிடித்துக் கொண்டிருந்த ஒரு படகுடன், 12 மீனவர்களை எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படை கைது செய்து மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இதையும் படிக்க | சொல்லப் போனால்… ‘கண் திறக்கப்பட்ட’ நீதிதேவதையும் கடவுள் காட்டிய வழியும்!
முதற்கட்ட விசாரணைக்கு பின்னர் மீனவர்கள் படகுடன் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஞாயிற்றுக்கிழமை காலை ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.