நோயாளிகளின் விவரங்கள், ஆவணங்கள் முறையாக பராமரிக்க வேண்டும்: மருத்துவக் கல்லூரிகளுக்கு அறிவுறுத்தல் | Patient details and documents must be maintained properly

1372796
Spread the love

சென்னை: தேசிய மருத்​துவ ஆணை​யத்​தின் (என்​எம்​சி) செயலர் மருத்​து​வர் ராகவ் லங்​கர் வெளி​யிட்ட அறி​விப்​பு: நாடு முழு​வதும் உள்ள அரசுமற்​றும் தனி​யார் மருத்​துவ கல்​லூரி மருத்​து​வ​மனை​களுக்கு வரும் நோயாளி​களின் அனைத்து வித​மான விவரங்களையும், அவர்​களுக்கு மேற்​கொள்​ளப்​படும் பரிசோதனை​கள் குறித்த தரவு​களை​யும் ஆவணப்​படுத்த வேண்டும் என்று ஏற்​க​னவே அறிவுறுத்​தப்​பட்​டுள்​ளது. ஆனாலும், சில மருத்​துவ கல்​லூரி​களும், கல்வி நிறு​வனங்​களும் அதனை முறை​யாக பின்​பற்று​வ​தில்​லை.

மருத்​து​வ​மனை​களில் உள்​நோ​யாளி​களாக அனு​ம​திக்​கப்​படு​வோரின் ஆவணங்​களில் துறை ​சார் மருத்​து​வர் மற்​றும் முது​நிலை உறை​விட மருத்​து​வர் கையெழுத்து அவசி​யம் இருக்க வேண்​டும். மருத்​துவ கல்​லூரி​களில் ஆண்​டு​தோறும் மேற்​கொள்​ளப்​படும் ஆய்வு நடவடிக்​கை​களின் ஒரு பகு​தி​யாக இந்த விவரங்​களை​யும் தேசிய மருத்​துவ ஆணை​யத்​தின் அதி​காரி​கள் சோதனை செய்​வார்​கள். அதில் ஏதேனும் போலி ஆவணங்​களோ, விவரங்​களோ இருப்​பது கண்​டறியப்​பட்​டால், சம்​பந்​தப்​பட்ட மருத்​துவ கல்​லூரி​கள் மற்​றும் மருத்​து​வர்​கள் மீதும் நடவடிக்கை எடுக்​கப்​படும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *