பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட இந்த புதிய சட்டத்திருத்த மசோதா பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது.
இதனைத் தொடர்ந்து சட்டத்திருத்த மசோதா ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், பாலியல் வன்கொடுமை வழக்கில் கடும் தண்டனை வழங்கும் தமிழ்நாடு அரசின் சட்டத்திருந்த மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
ஆளுநரின் ஒப்புதலை அடுத்து சட்டத்திருத்த மசோதா குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட உள்ளது.
பாலியல் வன்கொடுமை புதிய சட்டத்திருத்த மசோதா – தண்டனை விவரங்கள்:
* பாலியல் வன்கொடுமைக்கு முன்னர் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது குறைந்தபட்சம் 14 ஆண்டுகள் சிறை.
* நெருங்கிய உறவினர் (அ) காவல்துறை ஊழியர் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டால் முன்னர் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை வைக்கப்பட்ட நிலையில், தற்போது குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் சிறை .
* 12 வயதுக்குட்பட்ட சிறுமி மீது பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டால் முன்னர் குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் சிறை (அ) ஆயுள் தண்டனை (அ) மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது ஆயுள் (அ) மரண தண்டனை.
* பாலியல் வன்கொடுமை மற்றும் மரணத்தை விளைவிக்கும் குற்றத்துக்கு முன்னர் குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது ஆயுள் தண்டனை.
* கூட்டுப் பாலியல் வன்கொடுமை குற்றத்துக்கு முன்னர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது மரண தண்டனை.
* மீண்டும் மீண்டும் குற்றம் இழைத்தவர்களுக்கு குற்றத்துக்கு முன்னர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது மரண தண்டனை.