புலனாய்வு அதிகாரிகள் விமானத்தில் பயணிக்க டிஜிபி-க்கு அனுமதி அதிகாரம் | DGP has the authority to grant permission for intelligence officers to travel by plane

1376957
Spread the love

சென்னை: குற்​ற​வாளி​களை கைது செய்​யும் வகை​யில் புல​னாய்வு அதி​காரி​கள் பிற​மாநிலங்​களுக்கு விமானம் மூலம் பயணம் மேற்​கொள்ள அனு​மதி அளிக்​கும் அதி​காரம் டிஜிபி-க்கு வழங்​கப்​பட்​டுள்​ளது.

குற்​றங்​கள் நடை​பெறாத மாநில​மாக தமிழகத்தை உரு​வாக்க வேண்​டும் என முதல்​வர் மு.க.ஸ்​டாலின் போலீ​ஸாருக்கு உத்​தர​விட்​டிருந்​தார்.

குறிப்​பாக டிஜிட்​டல் கைது, இணை​யதள மோசடிகள், ஆன்​லைன் முதலீட்டு மோசடிகள் போலீ​ஸாருக்கு சவால் விடும் வகை​யில் உள்​ளது. இவ்​வகை மோசடிக்​காரர்​கள் வெளி​மாநிலம் அல்​லது வெளி​நாடு​களில் இருந்​த​வாறு பொது மக்​களிட​மிருந்து கோடிக்​கணக்​கான பணத்தை நொடியில் பறித்து விடு​கின்​றனர்.

இந்​தவகை குற்​ற​வாளி​களை கைது செய்ய விசா​ரணை (புல​னாய்​வு) அதி​காரி​கள் வெளி​மாநிலம் செல்ல வேண்​டியது உள்​ளது. ரயில் அல்​லது பேருந்​துகளில் பயணித்​தால் அதிக நேரம் செல​வாகும். சைபர் க்ரைம் மோசடி​யில் 24 மணி நேரத்​திலிருந்து 48 மணி நேரத்​துக்​குள் மோசடிக்​காரர்​கள் ஒரு வங்கி கணக்​கி​லிருந்து அடுத்த வங்​கி, அதற்கு அடுத்த வங்கி என மாற்​றம் செய்து அனைத்து பணத்​தை​யும் மோசடி செய்து விடு​கின்​றனர்.

அவர்​களை விரைந்து கைது செய்ய வேண்​டும் என்​றால் விசா​ரணை அதி​காரி​கள் விமானத்​தில் செல்ல வேண்​டும். அதற்​கான பயண கட்​ட​ணம் அனு​ம​தியை டிஜிபி வழங்க முடி​யாது. அரசிடம் உரிய அனு​மதி பெற வேண்​டும். இதற்கு கால​தாமத​மாகும். இந்த தாமதம் குற்​ற​வாளி​களுக்கு உதவி​யாகி விடு​கிறது.

இதை தடுக்​கும் வகை​யில் புல​னாய்வு அதி​காரி​கள் விசா​ரணைக்​காக பிற மாநிலங்​களுக்கு விமானம் மூலம் பயணம் மேற்​கொள்ள அனு​மதி அளிக்​கும் அதி​காரம் டிஜிபிக்கு வழங்க வேண்​டும் என டிஜிபி தரப்​பில் கோரிக்கை வைக்​கப்​பட்​டது. இதை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் ஏற்​றுக் கொண்​டு, அதற்​கான அறி​விப்பை சட்​டப்​பேர​வை​யில் கடந்த ஏப்​ரல் 29-ல் அறி​விப்பு வெளி​யிட்​டார்.

இதையடுத்​து, பிற மாநிலங்​களுக்கு புல​னாய்வு அதி​காரி​கள், குற்​ற​வாளி​களை கைது செய்​யும் வகை​யில் விமானத்​தில் பயணம் மேற்​கொள்ள டிஜிபி​யிடம் அனு​மதி பெற்​றால் போதும் என்ற உத்​தரவு தற்​போது நடை​முறைக்கு வந்​துள்​ளது. சைபர் க்ரைம், பொருளா​தார குற்​றங்​கள் தொடர்​புடைய குற்​ற​வாளி​கள் மட்​டும் அல்​லாமல் கொலை, கொள்​ளை, வழிப்​பறி கொள்​ளை​யர்​கள் கூட சில நேரங்​களில் பிற மாநிலங்​களில் இருந்து தமிழகம் வந்து கைவரிசை காட்​டி​விட்டு தப்பி விடு​கின்​றனர். அவர்​களை விரைந்​து, விமானத்​தில் சென்று கைது செய்​ய​வும் இந்த உத்​தரவு பயனுள்​ள​தாக இருக்​கும் என போலீஸ் தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *