ஆறு விண்கற்கள் நாளை (அக். 24) பூமியைக் கடந்து செல்லவிருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.
பூமிக்கு அருகில் ஆறு விண்கற்கள் வியாழக்கிழமையில் (அக். 24) கடந்து செல்லவிருப்பதாக நாசா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அவற்றில் 363305 (2002 என்வி16) என்ற விண்கல்தான் அளவில் பெரியதாக இருக்கும்; 140 முதல் 310 மீட்டர் வரை விட்டம் கொண்டது.
580 அடியுடன், தோராயமாக ஒரு பெரிய கட்டடத்தின் அளவாக இருக்கும். இது மணிக்கு 17,542 கி.மீ. (வினாடிக்கு 4.87 கி.மீ.) வேகத்தில் நாளை (அக். 24) இரவு 9.17 மணியளவில், பூமியை 45.2 லட்சம் கி.மீ. தொலைவில் கடந்து செல்லவுள்ளது.
இதையும் படிக்க: மதுரை: 3 நாள்களுக்கு டாஸ்மாக் கடைகள் விடுமுறை!
ஒரே சமயத்தில் 44,400 மெகா டன் வெடிபொருள் வெடித்தால், எவ்வளவு பாதிப்பு ஏற்படுமோ அந்த அளவுக்கு பாதிப்பை இந்த விண்கல் ஏற்படுத்தும்; 6 கி.மீ. விட்டத்தில் 2 கி.மீ. அடி ஆழத்திற்கு இந்த விண்கல் ஒரு பெரிய பள்ளத்தை ஏற்படுத்தும். விண்கல் விழுந்த இடத்திலிருந்து சுமார் 700 கி.மீ. தொலைவுக்கு பெரும் அதிர்வலைகள் பரவும். கடலில் விழுந்தால் சுமார் 100 அடி உயரத்துக்கு சுனாமி எழவும் வாய்ப்புள்ளது.
இதற்கடுத்த அளவுகொண்ட இரண்டு விண்கற்களில் ஒன்றான 2023 டிஜி 14 (76 அடி) விண்கல் மணிக்கு 24,858 கி.மீ. வேகத்தில் 25,50,000 கி.மீ. தொலைவிலும், 2015 ஹெச்எம் 1 (100 அடி) விண்கல் 55,30,000 கிலோமீட்டர் தொலைவில், மணிக்கு 39,158 கி.மீ வேகத்தில் செல்கிறது.
மீதமுள்ள 2024 டிபி 17, 2024 டிஆர் 6 மற்றும் 2021 யுஇ 2 விண்கற்கள் சுமார் 30 முதல் 92 மீட்டர் வரை உள்ளன. இவை 4.5 முதல் 5.6 மில்லியன் கி.மீ. தொலைவில் கடந்து செல்லும்.