பெண் போல் டேட்டிங் செய்து பணம் பறிப்பு

77 Photoaidcom Lighten
Spread the love

செல்போன்கள் இன்றைய காலகட்டத்தில் முக்கியமானதாக மாறிவிட்டது. செல்போன் இல்லாத நபர்களே என்ற நிலை உள்ளது. சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அவர்களது கையில் தூங்கும் நேரம் தவிர மற்ற அனைத்து நேரங்களிலும் கைகளில் ஒட்டிக்கொண்டு இருக்கிறது.

செல்போன்கள்

இந்த செல்போன்களை தேவைக்கும், நன்மைக்கும் பயன்படுத்துபவர்களை விட தற்போது வெட்டிப்பேச்சு, ஆன்லைன் சூதாடட்டம், டேட்டிங், ஆபாச வலைதளம், ஆபாச மசாஜ் உள்ளிட்டவற்றிற்காக பயன்படுத்துவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதில் சபல புத்தி உள்ளவர்களை குறிவைத்து ஒரு கும்பல் பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் பலர் பணத்தை இழந்து இருந்தாலும் புகார் தெரிவிப்பது ஒருசிலரே. சபலத்தில் பணத்தை இழந்தது தெரிந்தால் அசிங்கம் மற்றும் குறைந்த அளவு பணத்தை இழந்ததால் புகார் தெரிவிப்பது இல்லை.

ஆன்லைன் டேட்டிங்

இதனை சாதகமாக பயன்படுத்தி ஆன்லைன் டேட்டிங், மோசடி கும்பல் தங்களது வலையை மேலும் விரித்து உள்ளது. இதன் ஒரு படி மேலாக ஆண்களே பெண்கள் போல் போலியாக கணக்குகளை தொடங்கி இளைஞர்கள் மற்றும் படித்து நல்ல வேலையில் உள்ள என்ஜினீயர் உள்ளிட்டோரை தங்களது மாயவலையில் சிக்கவைத்து பணத்தை கறந்து விடுகின்றனர். இதேபோல் ஒரு சம்பவம் சென்னையில்நடந்து உள்ளது. இதில் 5 இளைஞர்கள் சிக்கி உள்ளனர். அதுபற்றிய விபரம் வருமாறு:-

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் தாமோதர கண்ணன் (24). இவருக்கு, அகிலா என்ற பெண் டேட்டிங் செயலில் அறிமுகமாகி உள்ளார். இருவரும் விடிய, விடிய டேட்டிங் செய்து உள்ளனர். தாமோதர கண்ணன் தனக்கு பிடித்த பெண் சிக்கி விட்டார் என்று நினைத்து உருக,உருக மெசேஜ் அனுப்பி வந்தார்.

பெண்கள் போல்

இந்ந நிலையில் திடீரென தொடர்பில் இருந்த பெண் அகிலா அவசர தேவையாகக் தாமோதர கண்ணனிடம் ரூ.500 ஆன்லைன் மூலம் பெற்றார். பின்னர் சில நாட்கள் தொடர்பில் இல்லாமல் அகிலா இருந்தாக தெரிகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்குப் பிறகு சைபர் கிரைம் போலீஸ் எனக் கூறி பேசிய நபர்கள், அகிலா தற்கொலை செய்துவிட்டதாகவும், உங்களுடன் தான் கடைசியாக தொடர்பில் இருந்து பேசி உள்ளார்.

பணம் கேட்டு மிரட்டல்

எனவே உங்கள் மீது வழக்கு பதியப்போவதாக தாமோதர கண்ணனிடம் தெரிவித்தனர். இதனால் வௌவௌத்துப்போன தாமோதர கண்ணன் இதுபற்றி தெரிந்தால் வீட்டில் பிரச்சினை ஆகிவிடும், அசிங்கம் என்று நினைத்து அவர்களிடம் பேசி உள்ளார்.
உடனே போனில் பேசிய நபர்கள் அகிலா வழக்கி சேர்க்காமல் இருக்க ரூ.13,500 வேண்டும் என்று கூறி ஆன்லைன் மூலம் பெற்றுக்கொண்டனர். பின்னர் மீண்டும் தொடர்பு கொண்ட அதே நபர்கள் தாமோதர கண்ணனிடம் மேலும் ரூ.70 ஆயிரம் கேட்டனர்.

5பேர் சிக்கினர்

அந்த தொகையைத் தாமோதர கண்ணன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட கும்பல் மிரட்டி உள்ளது. இதன் பின்னரே தாமோதர கண்ணனுக்கு தான் ஏமாற்றப்பட்டது தெரிந்தது.
இதுகுறித்து போலலீசில் அவர் புகார் செய்தார். போலீசார் தாமோதர கண்ணனிடம் ஆன்லைன் டேட்டிங் செய்த கணக்கு விபரம் மற்றும் அவரை போன்செய்து மிரட்டிய நபர்களின் செல்போன் எண் மற்றும் அவர் பணம் அனுப்பிய வங்கி கணக்கு எண்ணை வைத்து தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போதுதான் தாமோதர கண்ணனிடம் மர்ம கும்பல் பெண்கள் பெயரில் கணக்கு தொடங்கி ஏமாற்றி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து ஆன்லைன் டேட்டிங் செயலியில் நூதன முறையில் பணம் பறித்து வந்த ஆவடி சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த லியோதுரை (25), சீனிவாசன் (26), தமிழன் (25), முகமது ரியாஸ் (23), பிரித்திவிராஜ் (28) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
அவர்கள் இதுபோல் எத்தனைபேரை மோசடி செய்து மிரட்டி பணம் பறித்தனர், என்பது குறித்த அவர்களது வங்கி கணக்கு விபரங்களை வைத்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *