பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 உதவித் தொகை வழங்கும் ‘அன்புக் கரங்கள்’ திட்டம் இன்று தொடக்கம் | anbu karangal scheme launches today

1376507
Spread the love

சென்னை: பெற்​றோரை இழந்த குழந்​தைகளை அரவணைத்து தொடர்ந்து பாது​காக்​கும் வகை​யில், 18 வயது வரையி​லான பள்​ளிப் படிப்பு முடி​யும் வரை இடைநிற்​றல் இன்றி கல்​வியை தொடர அவர்​களுக்கு மாதம் ரூ.2,000 உதவித் தொகை வழங்​கும் ‘அன்​புக்​ கரங்​கள்’ திட்​டத்தை முதல்​வர் ஸ்டா​லின் இன்று சென்​னை​யில் தொடங்கி வைக்​கிறார்.

இதுதொடர்​பாக தமிழக அரசு நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறப்​பட்​டுள்​ள​தாவது: ஏற்​றமிகு தமிழகத்தை உரு​வாக்க, குழந்​தைகளின் கல்வி மற்​றும் அவர்​களது சீரான வளர்ச்​சிக்கு தமிழக அரசு பல்​வேறு திட்​டங்​களை சிறப்​பான முறை​யில் செயல்​படுத்தி வரு​கிறது. மிக​வும் வறுமை​யில் உள்ள குடும்​பங்​களை அடை​யாளம் கண்​டு, அவர்​களது வாழ்க்​கைத் தரத்தை மேம்​படுத்த ‘தா​யு​மானவர்’ திட்​டத்தை தமிழக அரசு அறி​முகம் செய்​துள்​ளது. இதன் ஒரு பகு​தி​யாக, பெற்​றோர் இரு​வரை​யும் இழந்த குழந்​தைகள் மற்​றும் பெற்​றோரில் ஒரு​வரை இழந்து மற்​றொரு பெற்​றோ​ரால் பராமரிக்க இயலாத குழந்​தைகளை அரவணைத்து தொடர்ந்து பாது​காக்​கும் வகை​யில் ‘அன்​புக்​ கரங்​கள்’ திட்​டம் அறிவிக்​கப்​பட்​டது.

அந்த குழந்​தைகளின் 18 வயது வரையி​லான பள்​ளிப் படிப்பு முடி​யும் வரை இடைநிற்​றல் இன்றி கல்​வியை தொடர மாதம் ரூ.2,000 உதவித் ​தொகை வழங்​கப்​படும். அது மட்​டுமின்​றி, பள்​ளிப் படிப்பை முடித்த பிறகு கல்​லூரிக் கல்வி மற்​றும் உரிய திறன் மேம்​பாட்டு பயிற்​சிகளும் அவர்​களுக்கு வழங்​கப்​படும். இதற்கு வழி​வகை செய்​யும் ‘அன்​புக்​ கரங்​கள்’ திட்​டத்தை சென்னை கலை​வாணர் அரங்​கில் முதல்​வர் ஸ்டா​லின் இன்று தொடங்கி வைத்​து, குழந்​தைகளுக்கு உதவித் தொகையை வழங்க உள்​ளார்.

மடிக்​கணினிகள்: மேலும், பெற்​றோர் இரு​வரை​யும் இழந்​து, பிளஸ் 2 முடித்​து,பல்​வேறு உயர்​கல்வி நிறு​வனங்​களில் தமிழக அரசின் முயற்​சி​யால் சேர்க்​கப்​பட்​டுள்ள மாணவ, மாணவி​களுக்கு மடிக்​கணினிகளை​யும் முதல்​வர் வழங்க உள்​ளார்.இவ்​வாறு அதில் கூறப்​பட்​டு உள்​ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *