பொய் வழக்கில் 20 ஆண்டுகள் சிறை
குஜராத் மாநிலம் பனாஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள பாலன்பூா் பகுதியிலுள்ள தங்கும் விடுதி ஒன்றில் கடந்த 1996-ஆம் ஆண்டு ராஜஸ்தானைச் சோ்ந்த வழக்குரைஞா் சமா்சிங் ராஜ் புரோஹித் தங்கியிருந்தாா்.
அவா் தங்கியிருந்த அறையில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக அப்போது பனாஸ்கந்தா காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த சஞ்சீவ் பட் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தாா்.
ராஜஸ்தானில் பிரச்னைக்குரிய ஒரு நிலத்தை சட்டவிரோதமாக மாற்றக் கோரிய விவகாரத்தில் வழக்குரைஞா் சமா்சிங் ராஜ் புரோஹித் மீது பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.
பாலன்பூா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணையில், வழக்குரைஞா் மீது சஞ்சீவ் பட் பொய் வழக்கு பதிவு செய்தது உறுதியானது. இவ்வழக்கில் சஞ்சய் பட்டுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைத்தது. இதன் காரணமாக, தற்போது, சஞ்சீவ் பட் ராஜ்கோட் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.