மத்திய பட்ஜெட் அல்ல; தேசிய ஜனநாயக கூட்டணி பட்ஜெட்: சித்தராமையா

Dinamani2f2024 072f40e271ea E1d4 491f 8105 3f3f373b07972fsiddaramaiah20press20meet20edi.jpg
Spread the love

2024-25 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (ஜூலை 23) தாக்கல் செய்தார். இது குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

பட்ஜெட் குறித்து முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளதாவது,

”கர்நாடகத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வானவர் நிர்மலா சீதராமன். அவர் மாநிலத்துக்கு நீதி வழங்குவார் என்றும், நிலுவையிலுள்ள உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் நிதி ஒதுக்கி, உயரும் வட்டி விகிதத்திலிருந்து மாநில மக்களை காப்பார் எனவும் எதிர்பார்த்திருந்தோம். ஆனால் அவர் மக்களுக்கு ஏமாற்றமளித்து, கர்நாடகத்துக்கு அநீதி இழைத்துள்ளார்.

மத்திய அரசு அறிவித்துள்ள பட்ஜெட்டில் கர்நாடகம் பெறப்போவது ஒன்றுமில்லை. ஆந்திரத்துக்கும் பிகாருக்கு மட்டுமே சிறப்புத் திட்டங்களை வழங்கியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் நீடிக்க, அந்த இரு மாநில அரசின் துணை தேவைப்படுவதால், அவற்றிற்கு திட்டங்களை அறிவித்து மற்ற மாநிலங்களை வஞ்சித்துள்ளனர்.

மத்திய பட்ஜெட் முற்றிலும் ஏமாற்றம் அளிக்கக்கூடியது. குறிப்பாக எஸ்.சி., எஸ்.டி., மற்றும் விவசாயிகளுக்கு அநீதி இழைக்கும் வகையில் உள்ளது. நிதீஷ் குமார், சந்திரபாபு நாயுடு ஆட்சி செய்யும் இரு மாநிலங்களைத் தவிர்த்து, நாட்டில் 26 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்கள் உள்ளன. இந்தியா கூட்டாட்சி நாடு. இதில் கர்நாடகம் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது என சித்தராமையா குறிப்பிட்டார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *