முதலீடே இல்லாமல் நாளொன்றுக்கு ரூ. 4,000 சம்பாதிக்கும் இளைஞர்!

Dinamani2f2025 02 072f1vyzyumy2fkumbh.jpg
Spread the love

பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி (புராண நதி) ஆகியவை கூடும் திரிவேணி சங்கமத்தில் கடந்த ஜனவரி 13-ஆம் தேதி (பெளஷ பெளா்ணமி) மகா கும்பமேளா தொடங்கி நடைபெற்று வருகிறது.

மாபெரும் ஆன்மிக-கலாசார நிகழ்வாக கருதப்படும் இக்கும்பமேளாவில் இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் இருந்து இதுவரை 40 கோடிக்கணக்கும் அதிகமான பக்தா்கள் புனித நீராடியுள்ளனர்.

இந்நிலையில், திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் விடும் காணிக்கைகளை காந்தத்தை பயன்படுத்தி நாளொன்றுக்கு ரூ. 4,000 வரை இளைஞர் ஒருவர் சேகரித்து வருகிறார்.

பிரயாக்ராஜ் பகுதியைச் சேர்ந்த பலரும் ஆற்றில் பக்தர்கள் விடும் காணிக்கையை சேகரிப்பதன் மூலம் கணிசமான தொகையை சம்பாதித்து வருகின்றனர்.

இணையத்தில் வைரலாகும் விடியோ ஒன்றில், ஒரு கயிற்றில் பல காந்தங்களை கட்டி, நீருக்குள் இறங்கும் இளைஞர் மீண்டும் கரைக்கு வரும்போது சில்லரைக் காசுடன் வருகிறார்.

அவர் விடியோ எடுத்த பக்தரின் சில கேள்விக்கு பதிலளித்துள்ளார். ஒருமுறை ஆற்றுக்குள் இறங்கி வெளியே வந்தால், ரூ. 200 முதல் ரூ. 250 வரை கிடைக்கும் என்றும், நாளொன்றுக்கு ரூ. 3,000 முதல் ரூ. 4,000 வரை கிடைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடியோவை பார்க்கும் பலரும், பட்டதாரிகள்கூட நாளொன்றுக்கு இவ்வளவு வருமான ஈட்ட மாட்டார்கள் என்று புலம்பி வருகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *