முதல்வர் ஸ்டாலினுக்கு அமெரிக்காவில் உற்சாக வரவேற்பு! | CM Stalin warmly welcomed in United States of america

1302651.jpg
Spread the love

சான்பிரான்சிஸ்கோ: தமிழகத்துக்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் அமெரிக்கா சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அங்குள்ள சான்பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில், அமெரிக்க நாட்டின் சான்பிரான்சிஸ்கோவிற்கான இந்திய துணைத் தூதர் ஸ்ரீகர் ரெட்டி, தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் அமெரிக்க வாழ் தமிழர்கள் ஆகியோர் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “அமெரிக்க மண்ணில் தரையிறங்கியபோது தாய்த்தமிழ் உறவுகள் அளித்த நெகிழ்ச்சியான வரவேற்பில்” என தெரிவித்து புகைப்படங்களை இணைத்துள்ளார்.

தமிழகத்தை 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார மாநிலமாக மாற்ற முதல்வர் ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்துள்ளார். இதற்காக பல்வேறு முயற்சிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக முதல்வர் ஸ்டாலின் அரசு முறை பயணமாக கடந்த 27-ம் தேதி அமெரிக்கா புறப்பட்டார். சென்னையில் இருந்து துபாய் வழியாக அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவுக்கு முதல்வர் ஸ்டாலின் சென்றுள்ளார்.

தமிழகத்துக்கான தொழில் முதலீடுகளை ஈர்த்த பிறகு, செப்.14-ம் தேதி அவர் தமிழகம் திரும்புவது போல பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *