அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 75.16 டிஎம்சியாக உள்ளது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இதே நிலையில் இருந்தால், நாளை மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டும். அதன் பிறகு அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படும்.
அதற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை வருவாய்த்துறை மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் எடுத்து வருகின்றனர். காவிரி கரைகளில் வருவாய்த்துறை அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். செட்டிப்பட்டி, கோட்டையூர், பண்ணவாடி பரிசல் துறைகளிலும் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
மேட்டூர் நீர்த்தேக்க பகுதியான அடிபாலாறு செட்டிபட்டி,கோட்டையூர் பண்ணவாடி பகுதிகளில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை.