ரவி மோகன் இயக்கும் முதல் படம்: புரோமோ தேதி அறிவிப்பு!

dinamani2F2025 09 092Fhlgcwfe82FG0aJQePa4AAE8XD
Spread the love

இயக்குநர் ரவி மோகனின் முதல் திரைப்படமான ’ஆன் ஆர்டினரி மேன்’ என்ற படத்தின் புரோமோ நாளை (செப்.10) வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது.

நடிகர் ரவி மோகன் பிறந்த நாளை முன்னிட்டு இந்தப் படத்தின் புரோமோ வெளியாகவிருக்கிறது.

நடிகர் ரவி மோகன் சமீபத்தில் தனது ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்கிற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தைத் துவங்கியுள்ளார்.

அதற்கான அறிமுக விழா சென்னையில் நடைபெற்ற நிகழ்வில், நடிகர்கள் கார்த்தி, சிவகார்த்திகேயன், சிவராஜ் குமார், எஸ்ஜே சூர்யா, பிரபல இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ரவி மோகன் இயக்கும் ’ஆன் ஆர்டினரி மேன்’ என்ற படத்தில் நாயகனாக யோகி பாபு நடித்துள்ளார்.

இந்தப் படத்தின் புரோமோ நாளை (செப்.10) மாலை 6.06 மணிக்கு வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *