ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற மூத்த வீரர்களை துலிப் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட வலிறுத்தக் கூடாது என பிசிசிஐ செயலர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
துலிப் கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 5 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. போட்டிகள் ஆந்திரம் மற்றும் பெங்களூருவில் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், காயம் ஏற்படும் அபாயம் இருப்பதால் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற மூத்த வீரர்களை துலிப் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட வலிறுத்தக் கூடாது என பிசிசிஐ செயலர் ஜெய் ஷா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.