நடிகர் சசிகுமாரின் அடுத்த படத்தின் அறிவிப்பை லோகேஷ் கனகராஜ் வெளியிடுகிறார்.
மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் 5ஆவது படமாக உருவாகும் இந்தப் படத்தினை அபிஷன் ஜீவிந்த் இயக்குகிறார்.
இந்தப் படத்தில் சசிகுமாருடன் நடிகை சிம்ரன் நடிக்கிறார். இந்தப் படத்தின் படத் தலைப்பு டீசரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடவிருக்கிறார்.
ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். குட் நைட், லவ்வர் படங்களை தயாரித்துள்ளது மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம்.
இயக்குநரும் நடிகருமான சசிகுமார் தற்போது இயக்குநர் ராஜு முருகன், அறிமுக இயக்குநர் இயக்கத்தில் நடித்து வருகிறார்.
ஃப்ரீடம் படம் விரைவில் திரைக்கு வரவிறுப்பது குறிப்பிடத்தக்கது. லோகேஷ் கனகராஜ் கூலி படத்தினை இயக்கிவருகிறார்.
.@SasikumarDir & @SimranbaggaOffc starrer #ProductionNo5 TITLE REVEAL TEASER will be released by sensational director @Dir_Lokesh Today at 6PM ⏳
Written & directed by @abishanjeevinth ✨
A @RSeanRoldan musical @Foxy_here03 @barathvikraman @MillionOffl @MRP_ENTERTAIN… pic.twitter.com/v4kCgv06SC— Million Dollar Studios (@MillionOffl) December 6, 2024