விடுதலை – 2: சர்வதேச திரையிடலுக்குப் பின்பும் 65 நாள்கள் படப்பிடிப்பு!

Dinamani2f2024 09 262frcm0w36w2fsnapedit1727342426854.jpeg
Spread the love

விடுதலை – 2 படப்பிடிப்பு குறித்து பேசியுள்ளார் இயக்குநர் வெற்றிமாறன்.

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை முதல் பாகத்தில் நடிகர் சூரி முதன்மை கதாபாத்திரத்திலும்  விஜய் சேதுபதி  முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றிப்படமாகவே அமைந்தது.

இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்காக மீதமுள்ள காட்சிகளுக்கான படப்பிடிப்பு இறுதிக்கட்டதை எட்டியுள்ளது. இதில், நடிகர்கள் சூரி மற்றும் விஜய் சேதுபதிக்கான காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இப்படம் கிறிஸ்துமஸ் வெளியீடாக டிச. 20 ஆம் தேதி வெளியாகிறது.

இந்த நிலையில், பிரபல ஆங்கில ஊடக நேர்காணலில் இயக்குநர்கள் வெற்றிமாறன், பா. இரஞ்சித், மகேஷ் நாராயணன், சோயா அக்தர், கரண் ஜோஹர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது வெற்றிமாறனிடம் படப்பிடிப்புக்கு முழுமையான ஸ்கிரிப்ட் இல்லாமல்தான் செல்வீர்களா? எனக் கேள்வி கேட்கப்பட்டது.

வேட்டையன் டிரைலர் எப்போது?

அதற்கு அவர், “விடுதலை படத்தை துவங்கும்போது ரூ. 4 கோடி பட்ஜெட்டில் 40 நாள்கள் படப்பிடிப்பு நடத்தும் திட்டத்திலேயே படப்பிடிப்புக்குச் சென்றேன். ஆனால், அங்கு சென்றதும் அப்பகுதியின் சூழல் கதையை பெரிதாக்க நிர்பந்தித்தது. அதனால், பட்ஜெட்டும் ரூ. 40 கோடியைத் தாண்டியதுடன் படப்பிடிப்பும் 200 நாள்கள் நடைபெற்றது.

பட்ஜெட் அதிகரித்ததால் படத்தின் வணிகத்திற்காக கதையை இரண்டு பாகங்களாக மாற்றினேன். விடுதலை – 2 படத்தை இந்தாண்டு ஜனவரி மாதம் ரோட்டர்டம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட்டோம். ஆனால், அதற்குப் பிறகும் 65 நாள்கள் படப்பிடிப்பை நடத்தினேன். இன்னும் 20 நாள்கள் படப்பிடிப்பு செய்ய வேண்டியிருக்கிறது” என்றார்.

இதைக் கேட்டு சக இயக்குநர்கள் ஆச்சரியப்பட்டு சிரித்ததுடன், ‘உங்கள் தயாரிப்பாளரின் எண் கிடைக்குமா? இரவு உணவிற்கு அவரை அழைத்தால் என்ன?’ எனக் கிண்டல் செய்தனர்.

உண்மையான வெற்றி எது தெரியுமா? வெற்றி விழாவில் ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *