அவர் எனது விளையாட்டைப் பார்த்து வாழ்த்துத் தெரிவித்தார். அவரது விளையாட்டை நான் சிறுவயதில் இருந்தே பார்த்துக் கொண்டிருக்கிறேன். கிரிக்கெட்டில் அவர் ஒரு ஜாம்பவான். விராட் கோலி பேட்டிங் ஆடும் போது அருமையாக விளையாடுகிறார் என வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.
அதுமட்டுமின்றி விராட் கோலி பேட்டிங் செய்யும் போது ரசிகர்கள் அனைவரும் அவரது பெயரை சொல்லி கோஷமிட்டனர். இது நம்ப முடியாத ஒன்றாகவே இருந்தது.
விராட் கோலி எனக்கு வாழ்த்து தெரித்து பின்னர், இலங்கை தொடருக்கு என்னைத் தேர்வு செய்யப்பட்ட நன்றாக விளையாட வேண்டும் என்று நம்புகிறேன் என்றும் கூறினார். எனது குடும்பத்தினர் அனைவரும் விராட் கோலியை நேசிக்கின்றனர்” எனத் தெரிவித்தார்.