வேடன் மீது பாலியல் வன்கொடுமை புகார்!

dinamani2F2025 07
Spread the love

பிரபல ராப் பாடகர் வேடன் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மலையாள திரையுலகில் மிகவும் பிரபலமானவர் ராப் பாடகர் வேடன். வேற்றுமைகளுக்கும், அடக்குமுறைகளுக்கும் எதிராகத் தொடர்ந்து பாடி வருவதால் இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உருவாகியுள்ளது. சுயாதீன பாடகராக மட்டமல்லாமல் திரைப்படங்களிலும் பாடி வருகிறார்.

இந்த நிலையில், தன்னைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி வேடன் பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் மருத்துவர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அப்புகாரில், இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான வேடன் கடந்த 2021 முதல் 2023 ஆம் ஆண்டு வரை தன்னிடம் அடிக்கடி பணம் பெற்றதுடன் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்தார் எனத் தெரிவித்துள்ளார்.

இப்புகார் குறித்து காவல்துறையினர் விசாரணையைத் துவங்கியுள்ளனர். சில மாதங்களுக்கு முன் வேடன் போதைப்பொருள் வழக்கில் கைதாகி விடுதலையானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: சல்மான் கானுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை ரத்தாகுமா? மான் வேட்டை வழக்கு மீண்டும் விசாரணை!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *