பிரபல கொரியன் இணையத் தொடரான ஸ்குவிட் கேம்- 2 ட்ரைலர் வெளியானது.
பிரபல கொரியன் இயக்குநர் கவாங் டோங்யுக் இயக்கத்தில் லீ ஜங் ஜே, பார்க் கே சூ, வி கா ஜோன் ஆகியோர் நடித்து கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் ஸ்குவிட் கேப் பாகம் 1 வெளியானது.
இந்தத் தொடரில் கடனில் இருப்பவர்களிடம் பேசி ஒரு விளையாட்டை அறிமுகம் செய்கிறார்கள். விளையாட ஒப்புக் கொள்கிறவர்களை அடையாளம் தெரியாத இடத்தில் அடைத்து வைத்து ஒரு குழு விளையாட்டை நடத்துகிறது.
Let the new games begin.
Squid Game Season 2 ⏺️ ⏹️ DECEMBER 26 pic.twitter.com/1AcTYwijzk
— Netflix (@netflix) November 26, 2024
வெற்றி பெறுபவர்களுக்கு பெருந்தொகை வழங்கப்படும், மாறாக தோற்றால்? விதவிதமாக கொல்லப்படுகிறார்கள். அடுத்தடுத்து திருப்பங்கள் யாரும் யூகிக்க முடியாத வகையில் அமைக்கப்பட்ட திரைக்கதையால், ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட இந்தத் தொடருக்கு தமிழகம் இன்றி, உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.
அதன்படி, ஸ்குவிட் கேம் 2-வது சீசன் உருவாகி வருகிறது. இந்த சீசன் வரும் டிசம்பர் 26-ம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியாக உள்ளது. சமீபத்தில் 2-வது தொடரின் புதிய டீசர் வெளியாகி வைரலானது.
தற்போது இந்தத் தொடரின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.