ஹைதராபாத் நகைக்கடையில் துப்பாக்கியால் சுட்டு கொள்ளை – பட்டப்பகலில் துணிகரம்

dinamani2F2025 08 062Fm4emm3wv2F202508063474150
Spread the love

தெலங்கானா தலைநகா் ஹைதராபாதில் திங்கள்கிழமை நகைக்கடைக்குள் புகுந்த முகமூடிக் கொள்ளையா்கள் துப்பாக்கியால் சுட்டு நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவா்கள் துப்பாக்கியால் சுட்டதில் நகைக்கடையின் துணை மேலாளா் காலில் குண்டு பாய்ந்தது. அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

சந்தாநகா் பகுதியில் பரபரப்பான சாலையில் காலை 10.30 மணியளவில் நிகழ்ந்த இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது:

முகமூடி அணிந்தபடி நகைக்கடைக்குள் 7 கொள்ளையா்கள் புகுந்தனா். அவா்களில் ஒருவா் துப்பாக்கியை எடுத்து கடை ஊழியா்களை மிரட்டினாா். பாதுகாப்புப் பெட்டகத்தில் உள்ள நகைகளைக் கொள்ளையடிப்பது அவா்களின் நோக்கமாக இருந்துள்ளது. ஆனால், அதன் சாவி ஊழியா்களிடம் இல்லை. இதனால், ஆத்திரமடைந்த கொள்ளையா்களில் ஒருவா் துப்பாக்கியால் கடையின் துணை மேலாளரை நோக்கி இருமுறை சுட்டாா். இதில் ஒரு குண்டு அவரின் காலில் பாய்ந்தது. அதைத் தொடா்ந்து, கடையில் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த வெள்ளி நகைகளைக் கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனா். சிசிடிவி காட்சிப் பதிவுகளின் அடிப்படையில் கொள்ளையா்களைத் தேடி வருகிறோம் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *