புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் நிரவி அருகே உள்ள திருப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் சிங்காரவேலு. இவரது மகன் சந்தோஷ் (வயது13). இவர், நேற்று (27ந்தேதி) மதியம் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டு இருந்தார். பின்னர் அவர் மாயமானார். இதனால் சந்தோசை பெற்றோர் தேடிவந்தனர்.
கத்தியால் குத்தி கொலை
இதற்கிடையே சிறுவன் சந்தோஷ் அவரது வீட்டின் அருகே உள்ள மற்றொரு வீட்டிற்குள் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்தான். மேலும் அந்த வீட்டில் வசித்தவர்கள் மாயமாகி இருந்தனர்.
நிரவி போலீஸார் கொலையுண்ட சிறுவனின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
இதனிடையே, சிறுவனின் வீட்டின் அருகே வசிக்கும் மற்றொரு 18 வயது மதிக்கத்தக்க சிறுவன் மற்றும் அச்சிறுவனின் குடும்பத்தார் திடீரென மாயமாகி இருப்பதாகவும், இந்த கொலைக்கும் அவர்களுக்கும் ஏதேனும் சம்பந்தம் உள்ளதா என்பது குறித்தும் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
17 இடங்களில்
சிறுவனின் உடலில் கழுத்து,முகம், நெஞ்சு உள்ளிட்ட இடங்களில் மொத்தம் 17 இடங்களில் கத்தியால் குத்தப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. அந்த வீட்டில் கிடந்த கொலைக்கு பயன்படுத்திய கத்தியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் பக்கத்து வீட்டில் வசித்து வரும் 17 வயது சிறுவன், கொலையுண்ட சந்தோசின் தங்கையிடம் தவறாக நடக்க முயன்றதாக தெரிகிறது. இதனை சந்தோஷ் தட்டிக்கேட்டு கண்டித்து உள்ளான்.
17 வயது சிறுவன்
இதனால் ஏற்பட்ட கோபத்தில் 17 வயது சிறுவன், சந்தோசை வீட்டுக்குள் நைசாக அழைத்து வந்து கத்தியால் கொடூரமாக குத்தி கொலை செய்து இருப்பது தெரிந்தது. இந்த கொலையை மறைக்க கொலையாளி சிறுவனின் தாயும் உடந்தையாக இருந்து உள்ளார்.
அவர் வீட்டை பூட்டிவிட்டு மகனுடன் மயிலாடுதுறையில் உள்ள உறவினர் வீட்டில் பதுங்கி இருந்தது தெரிந்தது.அங்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார் கொலையாளி 17 வயது சிறுவன் மற்றும் அவரது தாயை அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அதிர்ச்சி
சிறுவன் சந்தோஷ் கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்றும் பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. 13 வயது சிறுவனை மற்றொரு சிறுவன் கத்தியால் குத்தி கொன்று உள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.