அ.தி.மு.க.வில் இருந்து சசிகலா, முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் ஓரம் கட்டப்பட்டு உள்ளனர். இதனால் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டு உள்ளது.இதேபோல் டிடிவி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து நடத்தி வருகிறார்.
தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு
அ.தி.மு.க.வினர் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று சசிகலா, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தொடர்ந்து அழைப்புவிடுத்து வருகிறார்கள். ஓ.பன்னீர் செல்வம் அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்றும் ஆரம்பித்து உள்ளார்.
ஆனால் சசிகலா, ஓ.பன்னீர் செல்வம் அழைப்புக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளராக உள்ள எடப்பாடி பழனசாமி, முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், முனுசாமி ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அவர்களுக்கும் கட்சிக்கும் சம்பந்தம் இல்லை என்று தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்ததில் அ.தி.மு.க. கூட்டணி தமிழகத்தில் எந்த தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. ஓ.பன்னீர் செல்வமும் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.மேலும் நடைபெற உள்ள விக்கிரவாண்டி இடைத்தேர்தலையும் அ.தி.மு.க. புறக்கணித்து உள்ளது. இதனால் ஒன்று பட்ட அ.தி-.மு.க.வால் மட்டுமே இனிவரும் தேர்தலில் வெற்றி பெறமுடியும் என்று கூறப்பட்டு வருகிறது.
20-ந் தேதி ஆலோசனைக் கூட்டம்
இந்த நிலையில் அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் 20-ந் தேதி சென்னையில் நடைபெறும் என்று ஓ.பன்னீர்செல்வம் அறிவித்து உள்ளார். இதனால் அ.தி.மு.க.வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட உள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் கழக அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ச. இராமச்சந்திரன் தலைமையில், சென்னை, மயிலாப்பூர், 72-75 டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலை, நியூ உட்லண்ட்ஸ் ஹோட்டலில் உள்ள ஜானகி கிருஷ்ணா ஹாலில் 20-06-2024 வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறும். அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இதையும் படியுங்கள்: