இந்நிலையில், தற்போது ஹக்காமடா முதுமையடைந்த தனது சகோதரியுடன் அவர்களது ஆதரவாளர்களின் உதவியுடன் வாழ்ந்து வரும் நிலையில், அவர் மீது தவறுதலாகக் குற்றம்சுமத்தப்பட்டு தனது வாழ்நாளின் 48 ஆண்டுகளை சிறையிலேயே கழித்ததினால் ஷிஸோக்கோ நீதிமன்றம் கடந்த மார்ச் 24 அன்று அவருக்கு நிவாரணம் அறிவித்தது.
அதன்படி, அவர் சிறையில் கழித்த ஒவ்வொரு நாளுக்கும் சுமார் 12,500 ஜப்பானிய யென் வீதம் மொத்தம் 21,73,62,500 யென் (1.4 மில்லியன் அமெரிக்க டாலர்) அளவிலான பணம் இழப்பீடாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ.11. 9 கோடியாகும்.
ஆனால், இந்த பணமானது அவர் 48 ஆண்டுகளாக அனுபவித்த கொடுமைகளுக்கு இழப்பீடாகக் கருதப்படாது என்றும் அரசு செய்த தவறுகளை 200 மில்லியன் யென்கள் கொடுத்தாலும் ஈடுசெய்ய முடியாது என ஹக்காமட்டாவின் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, ஐவாவோ ஹக்காமாட்டா ஜப்பானின் இரண்டாம் உலகப் போர் வரலாற்றுக்கு பிறகு மறுவிசாரணை வழங்கப்பட்ட 5-வது மரண தண்டனை கைதி ஆவார். மேலும், இவருக்கு முந்தைய 4 வழக்குகளிலும் மரண தண்டைப் பெற்ற கைதிகள் மறுவிசாரணையில் குற்றமற்றவர்கள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.