இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சென்று 3 டி20,3 ஒருநாள் போட்டி தொடர்களில் விளையாடுகிறது. உலககோப்பை போட்டிக்கு பிறகு நட்சத்திர வீரர்களான ரோகித்சர்மா, கோலி, ஹர்த்திக் பாண்டியா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது. ஜிம்பாப்வேவுக்கு எதிரான தொடரில் அவர்கள் விளையாட வில்லை.
சூர்யகுமார்யாதவ் கேப்டன்
மேலும் டி20 சர்வதேச போட்டியில் இருந்து கோலி, ரோகித்சர்மா, ஜடேஜா ஆகியோர் ஓய்வு பெறுவதாக அறிவித்து உள்ளனர்.
இந்த நிலையில் இலங்கைக்கு செல்லும் இந்திய அணியை இன்று(18ந்தேதி) இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்து உள்ளது.
இதில் டி20 இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளனர். ஹர்த்திக் பாண்டியா போட்டிக்கு திரும்பி உள்ளார்.
ரோகித் சர்மா
இதேபோல் ஒரு நாள்போட்டிக்கு ரோகித் சர்மா, கோலி, கே.எல்.ராகுல் ஆகியோர் திரும்பியுள்ளனர். ரோகித்சர்மா ஒரு நாள் போட்டிக்கான கேப்டனாக அறிவிக்கப்பட்டு உள்ளார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு துணைகேப்டனாக இளம் வீரர் சுப்மன் கில் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
இந்திய வீரர்கள்
டி20 போட்டிக்கான இந்திய வீரர்கள் விபரம் வருமாறு:&
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில் (துணைகேப்டன்),ஜெய்ஸ்வால், ரிங்கு சிங், ரியான் பராக், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்) சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய் , அர்ஷ்தீப் சிங், கலீல் அகமது, முகமது. சிராஜ்.
ஒருநாள் போட்டிக்கான வீரர்கள் விபரம் வருமாறு:-
ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில் (துணைகேப்டன்), விராட் கோலி, கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர், ஷிவம் துபே, குல்தீப் யாதவ், முகமது. சிராஜ், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், ரியான் பராக், அக்சர் படேல், கலீல் அகமது, ஹர்ஷித் ராணா.
போட்டி நடைபெறும் நாட்கள்
முதல் டி20 போட்டி வருகிற 27-ந்தேதி, 2-வது போட்டி 28-ந்தேதி, 3-வது போட்டி 30-ந்தேதி நடைபெறுகிறது.டி20 போட்டிகள் அனைத்தும் இரவு 7 மணிக்கு இலங்கையில் உள்ள பல்லேகலே மைதனாத்தில் நடைபெறுகிறது.
இதைத்தொடர்ந்து ஒரு நாள் போட்டி ஆகஸ்டு 2-ந்தேதி, 4-ந்தேதி, 7-ந்தேதிகள் நடைபெறுகின்றன. போட்டிகள் அனைத்து கொழும்பில் உள்ள மைதானத்தில் மதியம் 2.30 மணிக்கு தொடங்குகிறது.