ஃப்ரீஸ்டைல் செஸ் கிரான்ட்ஸ்லாம்: காலிறுதியில் குகேஷ் தோல்வி!

Dinamani2f2025 02 102f7chfnel72fgukesh.jpg
Spread the love

ஃப்ரீஸ்டைல் செஸ் கிரான்ட்ஸ்லாம் போட்டியின் காலிறுதிச் சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டர் குகேஷ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

நேற்று தகுதிச் சுற்றில் தோல்வி அடைந்த நிலையில், இன்றும் தோல்வியைத் தழுவினார். இப்போட்டியில் அடுத்தடுத்து தோல்வி அடைந்ததால் டாப் 4 போட்டியாளர்கள் பட்டியல் இருந்து சறுக்கினார்.

ஃப்ரீஸ்டைல் செஸ் கிரான்ட்ஸ்லாம் போட்டி ஜெர்மனியின் வெய்சன்ஹாஸ் பகுதியில் நடைபெற்று வருகிறது.

இதில் இன்று (பிப். 10) நடைபெற்ற காலிறுதிச் சுற்றில் இந்திய கிரான்ட் மாஸ்டர் டி. குகேஷ், அமெரிக்காவின் ஃபேபியானோ கருவானா உடன் மோதினார்.

ஞாயிற்றுக்கிழமை (பிப். 9) நடைபெற்ற தகுதிச் சுற்றில் கருவானா உடன் வெள்ளை நிறக் காய்களுடன் ஆடிய குகேஷ் தோல்வியைத் தழுவினார். இதனால் இப்போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் குகேஷ் களமிறங்கினார்.

விறுவிறுப்பாகத் தொடங்கிய இப்போட்டியின் 6வது நகர்த்தலில் குகேஷ் பின்னடைவைச் சந்தித்தார்.

தொடர்ந்து சமநிலையை நோக்கி ஆட்டம் சென்றுகொண்டிருக்கையில், மீண்டும் 17வது நகர்த்தலில் சறுக்கினார் குகேஷ். இதனால் காலிறுதிப் போட்டியிலும் தோல்வி அடைந்தார்.

காலிறுதிப் போட்டியில் தோற்றதன் மூலம் டாப் 4 வீரர்கள் பட்டியலில் இருந்து 8வது இடத்துக்கு வந்துள்ளார் குகேஷ்.

இதையும் படிக்க | அறிமுக ஆட்டத்தில் 150 ரன்கள்! சாதனை புரிந்த தென்னாப்பிரிக்க வீரர்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *