ஆனால், அந்தச் சட்டத்தை அனைத்துப் பள்ளிகளும் முழு அளவில் பின்பற்றாத சூழலில், தற்போது ஆம் ஆத்மி அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அதில், “2008 ஆம் இயற்றப்பட்ட சட்டத்தின்படி அனைத்துப் பள்ளிகளிலும் பஞ்சாபி மொழிப் பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை அனைத்துப் பள்ளிகளும் பின்பற்ற வேண்டும். ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பஞ்சாபி மொழிப் பாடத்தில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு சான்றிதழ் வழங்கக் கூடாது. இதனை பின்பற்றாத பள்ளியின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
தேசிய கல்விக் கொள்கையில் மும்மொழி கொள்கை சர்ச்சையான நிலையில், தெலங்கானாவைத் தொடர்ந்து பஞ்சாப் மாநிலமும் தாய் மொழியைக் கட்டாயப் பாடமாக கற்பிப்பதை உறுதி செய்ய வலியுறுத்தியுள்ளது.