அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கம் கிடைத்துள்ளதாக இந்திய வீராங்கனை பிரதீகா ராவல் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ராஜ்காட்டில் உள்ள சௌராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரதீகா ராவல் 96 பந்துகளில் 89 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 10 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவருக்கு ஆட்ட நாயகி விருது வழங்கப்பட்டது.