இபிஎஸ் தலைமையில் பிப்.24-ல் அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் | Eps announced that AIADMK district in-charge meeting will be held on feb 24th in chennai

1351305.jpg
Spread the love

சென்னை: அதிமுக மாவட்டப் பொறுப்பாளர்கள் கூட்டம் வரும் 24-ம் தேதி நடைபெறும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறவுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

இது குறித்து அதிமுக வெளியிட்ட அறிக்கையில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில், சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். மாளிகையில், 24.2.2025 திங்கட்கிழமை மாலை 4 மணிக்கு, “பூத் கமிட்டி அமைப்பது, கழக வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்துவது, கழக இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள் அணியில், விளையாட்டு வீரர்களை அதிக அளவில் சேர்ப்பது” முதலான பணிகளை விரைந்து முடிப்பதற்காக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டப் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்டப் பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *