ஈரான் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்த அமெரிக்க ராணுவத்திற்கு அதிபர் பைடன் உத்தரவிட்டுள்ளார்.
இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. 100க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஈரான் வீசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
காஸா, லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஈரான் பதில் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்படலாம் என அமெரிக்கா எச்சரித்திருந்தது. இந்த நிலையில் ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தி வருவதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.
இஸ்ரேலுக்கான விமான சேவை: தொடரும் தற்காலிகத் தடை!
எனவே, ஜெருசலேம் பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களில் பதுங்குமாறு இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. இதனிடையே இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக ஈரான் அரசு ஊடகமும் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. ஏவுகணை தாக்குதலை தொடர்ந்து நாட்டு மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் பகுதியிலும் தாக்குதல் நடத்தப்பட்டதால் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ஈரான் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்த அமெரிக்க ராணுவத்திற்கு அதிபர் பைடன் உத்தரவிட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.
இதனிடையே அமெரிக்கா தலையிட்டால் பதிலடி கொடுப்போம் என ஈராக் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு எச்சரித்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் நிலவி வருவதால் இஸ்ரேலில் உள்ள இந்தியவர்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
இஸ்ரேலில் சுமார் 28,000 இந்தியவர்கள் இருப்பதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.