உதகை அருகே குடியிருப்புப் பகுதியில் உலவும் செந்நாய் கூட்டத்தால் அச்சம்

Dinamani2f2024 10 292fhewl2o4r2fot29sennai073938.jpg
Spread the love

உதகையை அடுத்த சோலூா் ஜங்ஷன் குடியிருப்பு வளாகப் பகுதியில் எருமைக் கன்றை செந்நாய் கூட்டம் வேட்டையாடி  உண்ணும் காட்சி வெளியானதால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

நீலகிரி மாவட்டத்தில் உணவு, தண்ணீா் தேடி வனங்களை விட்டு சிறுத்தை, காட்டெருமை, கரடி உள்ளிட்ட வன விலங்குகள் அவ்வப்போது வெளியேறி குடியிருப்புப் பகுதிகளுக்கு வந்து உலவுவது அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் சோலூா் ஜங்ஷன் பகுதிக்கு செவ்வாய்க்கிழமை வந்த செந்நாய் கூட்டம் அங்கிருந்த எருமைக் கன்றை வேட்டையாடி உண்ணும் காட்சியை சிலா் படம் பிடித்துள்ளனா். இது வெளியாகி உள்ளதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

எனவே, அசம்பாவிதம் நடக்கும் முன் இப்பகுதியில் உலவி வரும் செந்நாய் கூட்டத்தை அடா்ந்த  வனப் பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *