உயரழுத்த மின் கட்டணத்தை காசோலையில் பெற கூடாது: அதிகாரிகளுக்கு மின்வாரியம் உத்தரவு | High voltage electricity bill should not be received in cheque

1317233.jpg
Spread the love

சென்னை: உயரழுத்த மின் கட்டணத்துக்கான தொகையை காசோலையில் பெறக் கூடாது என அதிகாரிகளுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக வாரிய அதிகாரிகள் கூறியதாவது: மின்வாரியம் சார்பில் வீடு, கடைஉள்ளடக்கிய தாழ்வழுத்த மின்நுகர்வோருக்கும், தொழிற்சாலை களுக்கான உயர் அழுத்த மின் நுகர்வோருக்கும் மின்சாரம் வழங்கப்படுகிறது. இவற்றுக்கான கட்டணத்தை இணையவழியில் பெறும் முயற்சியில் வாரியம் தீவிரம் காட்டி வருகிறது. தற்போது பெருவாரியான தாழ்வழுத்த நுகர்வோர் இணையவழியில் கட்டணத்தை செலுத்தும் நிலையில், உயரழுத்த பிரிவில் மின்சாரம் பெறுவோரும் இணையவழியில் கட்டணம் செலுத்த வேண்டும் என மின்வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. குறிப்பாக மின் கட்டணத்துக்காக பெறும் காசோலைகளை வங்கியில் செலுத்தி, வாரிய வங்கி கணக்கில் பணம் வந்து சேருவதற்கு சில நாட்கள் ஆவதால் காசோலைகளை பெறக் கூடாது எனவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

தற்போது உயரழுத்த மின் கட்டணம் மற்றும் இதர கட்டணங்களுக்கான தொகையை வரைவோலை யில் பெறுகிறோம். விரைவில் வரைவோலைகளையும் தவிர்த்து, இணையவழியில் மட்டுமே மின் கட்டணத்தை செலுத்துமாறு நுகர்வோருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கி வருகிறோம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *