ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப்

Dinamani2f2025 03 252fl9vvd7bi2fpti03252025000556b.jpg
Spread the love

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரின் 5ஆவது ஆட்டத்தில் பஞ்சாப், குஜராத் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் பிரியன்ஷ் ஆர்யா 47 ரன்கள் குவித்தார். அடுத்து வந்த கேப்டன் ஷ்ரேயாஷ் ஐயர் அதிரடியாக விளையாடி 97 ரன்களை குவித்தார்.

தனது முதல் சதத்தினை நிறைவு செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஷஷாங் சிங் அதிரடியாக விளையாடியதால் அவருக்கு கடைசி ஓவரில் பேட்டிங் வாய்ப்பு கிடைக்கவில்லை.

குஜராத் சார்பில் சாய் கிஷோர் 3, ரபாடா, ரஷித் கான் தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.

பின்னர் ஆடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 232 ரன்கள் எடுத்து தோல்வியைத் தழுவியது. குஜராத் அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் சாய் சுதர்சன் 74 ரன்கள் எடுத்தார்.

உலகின் மொத்த பணமும் இருந்திருந்தால் விமானியாக மாறியிருப்பேன்: கிளன் பிலிப்ஸ்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *