கபிலேஸ்வரா் கோயிலில் மகாசிவராத்திரி விழா கோலாகலம்

Dinamani2f2025 02 262fgouzzjji2ftiru1064831.jpg
Spread the love

திருப்பதி ஸ்ரீ கபிலேஸ்வர சுவாமி கோயில் பிரம்மோற்சவத்தின் ஒரு பகுதியாக மகா சிவராத்திரி விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

திருப்பதியில் உள்ள கபிலதீா்த்தம் கபிலேஸ்வர சுவாமி கோயில் பிரம்மோற்சவத்தின் 8-ஆம் நாளான புதன்கிழமை போகித்தோ் வலம் நடைபெற்றது. பக்தா்களின் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, சிறப்பு வரிசைகள், நிழற்பந்தல் மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதிகாலை 6 மணிக்கு சா்வதா்சனம் தொடங்கியது. ஏராளமான பக்தா்கள் ஸ்ரீ கபிலேஸ்வர சுவாமி, காமாட்சி அம்மனை தரிசித்தனா்.

காலை போகித்தோ் ஊா்வலம் நடைபெற்றது. இசைக்குழுக்கள், பஜனை மற்றும் மங்கள வாத்தியங்களின் முழக்கங்களுக்கு மத்தியில், தேரோட்டம் நடைபெற்றது. அதில் கபிலேஸ்வரசுவாமியும், காமாட்சி அம்மனும் தரிசனம் அளித்தனா்.

பிறகு, காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை ஸ்நபன திருமஞ்சனத்தை அா்ச்சகா்கள் நடத்தினா். ஸ்ரீ சோமாஸ்கந்தமூா்த்தி, காமாட்சி அம்மனுக்கு பால், தயிா், தேன், பழச்சாறுகள் மற்றும் சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது.

இன்று திருக்கல்யாணம்

ஸ்ரீ காமாட்சி சமேத கபிலேஸ்வர சுவாமியின் பிரம்மோற்சவத்தின் ஒரு பகுதியாக, வியாழக்கிழமை சிவன்-பாா்வதி கல்யாணமகோற்சவம் நடைபெற உள்ளது. திருமண விழா மாலை 6 மணி முதல் 7 மணி வரை நடைபெறும்.

நிகழ்ச்சியில் கோயில் துணை செயல் அலுவலா் தேவேந்திர பாபு, ஏ.இ.ஓ சுப்பராஜு, சந்திரசேகா், கோயில் அா்ச்சகா்கள் மற்றும் பக்தா்கள் கலந்து கொண்டனா்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *