குஜராத்தில் தொடர் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து குஜராத் முதல்வர் பூபேந்திர படேலிடம் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.
குஜராத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து பெய்து வந்த கனமழையால் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
குஜராத்தின் பல்வேறு மாவட்டங்களில் மக்கள் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர்.
தேசிய பேரிடா் மீட்புப் படை, மாநில பேரிடா் மீட்புப் படை, ராணுவம், இந்திய விமானப்படை மற்றும் இந்திய கடலோரக் காவல்படையினர் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.