பாடாலாசிரியர் சினேகன் மற்றும் நடிகை கன்னிகா தம்பதியினருக்கு அண்மையில் இரட்டைக் குழந்தைகள் பிறந்த நிலையில், அவர்களுக்கு நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் பெயர் சூட்டியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி பாடலாசிரியரான சினேகன், கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார்.
இவர் எழுதிய பாடல்களான ஆட்டோகிராஃப் படத்தில் இடம் பெற்றிருந்த ஞாபகம் வருதே மற்றும் ராம் படத்தில் இடம் பெற்றிருந்த ஆராரிராரோ பாடல்கள் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பெற்ற பாடல்களாகும்.
சினேகன் திருமணம் செய்துகொண்ட நடிகை கன்னிகா, சன் டிவியில் ஒளிபரப்பான ‘கல்யாண வீடு’ தொடரில் நாயகியாக நடித்துள்ளார். மேலும் ‘தேவராட்டம்’, ‘ராஜவம்சம்’ படங்களிலும் பிரதான வேடங்களில் நடித்துள்ளார்.