சென்னை மெட்ரோ ரயிலில் செப்டம்பர் மாதத்தில் மட்டும் 92.77 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயிலில் ஆகஸ்டு மாதத்தில் 95,43,635 போ் பயணித்துள்ளதாக மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
மெட்ரோ ரயிலில் பயணிப்பவா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மெட்ரோ ரயில் நிறுவனம் பாதுகாப்பான போக்குவரத்து வசதியை அளித்து வருகிறது.
இதன்படி, மெட்ரோ ரயிலில் நிகழாண்டு ஜனவரி மாதத்தில் 84,63,384 பேரும், பிப்ரவரி மாதத்தில் 86,15,008 பேரும், மாா்ச் மாதத்தில் 86,82,457 பேரும் பயணம் செய்துள்ளனா்.
தொடா்ந்து ஏப்ரலில் 80,87,712 பேரும், மே மாதத்தில் 84,21,072 பேரும், ஜூன் மாதத்தில் 84,33,837 பேரும், ஜூலை மாதத்தில் 95,35,019 பேரும் மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் 95,43,625 பேரும் செப்டம்பர் மாதத்தில் 92,77,697 பேரும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனா்.
இதில், அதிகபட்சமாக செப். 6-ஆம் தேதி ஒரு நாளில் மட்டும் 3,74,087 பேர் பயணித்துள்ளனர்.