சென்னை: பொன்னேரி – கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக 18 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, பயணிகளின் வசதிக்காக சென்னை சென்ட்ரல் – பொன்னேரி, மீஞ்சூர், எண்ணூர் இடையே 10 சிறப்பு ரயில்கள் இன்று இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில், பொன்னேரி – கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே பகல் 1.20 முதல் மாலை 5.20 வரை 4 மணிநேரம் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக காலை 10.15 முதல் மாலை 4.30 மணிவரை இந்த வழித்தடத்தில் வழக்கமாக இயக்கப்படும் 16 புறநகர் ரயில்கள் முழுமையாகவும், இரண்டு ரயில்கள் பகுதியளவும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மாற்று ஏற்பாடாக பயணிகளின் வசதிக்காக சென்னை சென்ட்ரல் மற்றும் கடற்கரை ரயில் நிலையங்களில் இருந்து பொன்னேரி, மீஞ்சூர், எண்ணூர் இடையே 10 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

