இங்கிலாந்து அணியின் மற்ற வீரர்கள் ஹாரி ப்ரூக் 3 ரன்கள், கேப்டன் ஜோஸ் பட்லர் 23 ரன்கள், லியம் லிவிங்ஸ்டன் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து அணி விக்கெட்டுகளை இழந்தபோதிலும், பென் டக்கெட் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அதிரடியாக விளையாடிய அவர் 143 பந்துகளில் 165 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 17 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.
இறுதியில் இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 351 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா தரப்பில் பென் துவார்ஷூயிஸ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
பின்னர் 352 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் நட்சத்திர வீரர் ஹெட் 6 ரன்களில் ஆட்டமிழக்க ஷார்ட் மட்டும் பொறுப்புடன் விளையாடினார். கேப்டன் 5 ரன்களில் ஆட்டமிழக்க மார்னஸ் லாபுஷேன் 47 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.
அவருக்குப் பின்னர் ஜோடி சேர்ந்த ஜோஸ் இங்லீஸ் – கேரி ஜோடி நங்கூரம் பாய்ச்சியது போல் நிலைத்து நின்று அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 5 விக்கெட்டுக்கு 146 ரன்கள் குவித்த நிலையில், அலெக்ஸ் கேரி 69 ரன்களில் வெளியேறினார். மற்றொருபுறம் அனைத்து பந்துகளை சிதறடித்த இங்லீஸ் 77 பந்துகளில் சதமடித்து புதிய வரலாறு படைத்தார். இதற்கு முன்னதாக 2002-ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக வீரேந்தர் ஷேவாக் 77 பந்துகளில் அதிவேகமாக சதமடித்திருந்த நிலையில், அந்த சாதனையை சமன்செய்துள்ளார் ஜோஸ் இங்கிலீஸ்.